• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திமுக போல, பாஜகவும் ஆட்சியில் தான் உள்ளது – அண்ணாமலை

Byகுமார்

Mar 18, 2022

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘ஊழல் எப்படி நிகழ்த்த வேண்டும் செந்தில் பாலாஜியை கற்றுக்கொள்ள வேண்டும், அவர் ஊழலின் தளபதியாக செயல்படுகிறார். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என ஸ்டாலினே கூறியுள்ளார்.

BGR நிறுவனத்தின் தகுதி தெரியாமல் டெண்டர் வழங்கியிருப்பதால் திமுக அரசு கார்ப்பரேட் அரசாக செயல்படுகிறது, கோபாலபுரம் குடும்பத்தினர் அனைத்து துறைகளில் தலையிட தொடங்கியுள்ளனர் எனவும், தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மின்வெட்டு தொடங்கும் அதற்கான அச்சாரத்தை தான் BGR நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியுள்ளனர், செந்தில் பாலாஜி BGR நிறுவனத்தின் ஊழியராக பேசுவதை விட தமிழகத்தின் அமைச்சராக பேச வேண்டும் எனவும், டான்ஜட்கோ நிராகரித்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர் அனுமதி வழங்கியது ஏன்? 4472கோடி ரூபாய்க்கு விதாண்டவாதமாக BGR நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியுள்ளனர், BGR நிறுவனத்தின் டெண்டர் முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்.
,
BGR நிறுவனம் 15 ஆண்டு காலமாக அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியுள்ளது குறித்து நிறுவனம் தொடங்கிய நாள் முதல் விசாரணை நடத்த வேண்டும், மின்சாரத்துறை அமைச்சர் தனது பதவியை முதலில் காப்பாற்றிக்கொள்ளட்டும், மின்வாரிய அமலாக்கத்துறையை முறையாக செயல்படுவதில்லை, செந்தில் பாலாஜி என் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தாலும், காவல்துறையை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் சந்திக்க தயார் எனவும், சிறையில் இருந்து வந்து மீண்டும் திமுக அரசின் ஊழலை வெளிக்கொண்டுவருவேன் எனவும், திமுக மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என பதிலளித்தார்.

தமிழகத்தில் பண அரசியல் செய்யலாம் என திமுக நினைக்கிறது, தமிழகத்தின் பிரச்சனையை பற்றி பாஜக மட்டும் தான் பேசுகிறது, BGR ஒப்பந்தம் குறித்தும் முதல்வர் மற்றும் செபி க்கு கடிதம் எழுதவுள்ளோம், BGR நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தினால் திமுக அரசை வெளிப்படையான என அரசு என ஒத்துக்கொள்கிறேன், எந்த கட்சி ஊழல் செய்தாலும் அதனை வெளிக்கொண்டுவருவோம், கார்ப்பரேட் தான் ஊழலின் ஊற்றுக்கண், எம்.பி.தொகுதிகளின் வெற்றிகளை கார்ப்பரேட் நிறுவனம் தான் முடிவு செய்யும் நிலை உள்ளது, தமிழகத்தில் 20 சதவிதம் கப்பம் கட்டி தான் நிறுவனம் அனுமதிபெறும் நிலை உள்ளது, ஊழல் செய்யும் எந்த நபர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சருக்கு ஊழல் நடைபெறுவது குறித்து தெரியபடுத்த வேண்டும் என்பது நமது கடமை, நமோ மொபைல் ஆப் என்பது மைக்ரோ டொனேசன் மூலமாக பாஜகவிற்கு நிதி செலுத்தலாம், ஸ்வட்ச் பாரத் , தடுப்பூசி போன்ற சமூக பணிகளை மேற்கொள்கிறோம், நமோ ஆப் பிற்கும் மத்திய அரசிற்கும் சம்மந்தமே இல்லை, நமோ ஆப் மூலமாக பாஜகவினர் சேவை செய்த பின்னர் ஸ்டிக்கர் ஒட்டுகிறோம், டீ குடிக்கிறோம் அதற்கான செலவுகளையும் செய்கிறோம்’ என்றார்.