• Tue. Nov 5th, 2024

திமுக அரசின் பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்…

Byகாயத்ரி

Mar 18, 2022

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசின் பட்ஜெட்டை கிண்டலடித்துள்ளார்.

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாளை தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் பின்னர் வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ம 3 வது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்கு மார், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, நடராஜன் மற்றும் ஆய்வாளர் சேரன் முன்னிலலையில் கையெழுத்திட்டார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், தமிழ் நாடு அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட், அதிமுக அரசின் திட்டங்களை லேபிள் ஒட்டும் அரசாக திமுக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *