• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Mar 13, 2023

முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்:
பொதுவாக முட்டை உணவு என்பது சிறுவர் முதல் பெரியவர் விரும்பும் ஒரு உணவாகும். இந்த முட்டையை ஆம்லேட், ஆப் பாயில், அவித்த முட்டை, பொரியல் முட்டை என ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பிடுவது உண்டு. இதில் விட்டமின் டி மற்றும் ப்ரோட்டீன் சத்துக்கள் அடங்கியுயள்ளதால் தினசரி ஒரு முட்டை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலும் சுகர் பேஷண்டுகள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம். நம் உடலில் நல்ல கொழுப்பை கொடுக்க கூடிய ஒரு பொருள் முட்டை. தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

மேலும் சில நன்மைகள்:

1.இதய நோயாளிகள் முட்டை சாப்பிட தயங்குவர். ஆனால் தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது என ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.சிலர் உடல் எடையை முட்டை கூட்டமோ என்று பயப்படுவர் .ஆனால் முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும்.

3.மேலும் தினம் முட்டை உண்பதால் உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது.

4.தினம் ஒரு முட்டை உண்பது நம் பசியைக் குறைக்கிறது.

5.முட்டைகளில் கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்