• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்:

Byவிஷா

Jun 17, 2023

பூரி உப்பலாக வர:

நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை வீட்டிலேயே தயாரிக்கும்போது அப்பளத்தை போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும். நாம் சுடும் பூரிகளையும் உப்பலாக வர இங்கு சில ரகசியங்ககளை பார்க்கலாம். பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவை நன்றாக பிசையவும். மாவை பிசைந்த பின் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மாவை ஊற வைத்துவிட்டு பூரி தயாரிக்க தயாராகலாம். இப்படி நீங்கள் தயாரிக்கும் பூரி ஹோட்டலில் சுடும் பூரி போல உப்பலாக வரும்.