• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

லைஃப்ஸ்டைல்:

Byவிஷா

May 23, 2023

சாமை அரிசி மாம்பழ கேசரி:
தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – 2 கப்
கருப்பட்டி – 1 கப்
நெய் – 4 மேசைக்கரண்டி
முந்திரி – தேவைக்கேற்ப
திராட்சை – தேவைக்கேற்ப
மாம்பழம் துண்டுகள் – 1 கிண்ணம்
தண்ணீர் – 6 கிண்ணம்

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் முந்திரி, திராட்சையை நெய்யில் போட்டு நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, இரண்டு கப் சாமை அரிசியை எடுத்து, அதில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்தபிறகு, அதனுடன் கருப்பட்டியை சேர்க்கவும். மேலும் அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை நெய்யுடன் சேர்த்து ஊற்றி நன்றாக கிளறி விட்டபின் பாதியளவு  மாம்பழ துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் வைக்கவும். கடைசியாக கிளறி விட்ட கலவையானது ஓரளவு நன்றாக கெட்டியானதும் இறக்கிவைத்தபின் மீதி உள்ள மாம்பழ துண்டுகளை தூவி அலங்கரித்து பரிமாறினால் ருசியான சாமை மாம்பழ கேசரி தயார்.