தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் வயது 55. இவரது மகன் மணிகண்டன் திருமணமான நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
மணிகண்டனின் மனைவி பிரிந்து சென்ற நிலையில் நாள்தோறும் தொடர்ந்து மது போதையில் வந்து தந்தை ரங்கனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தந்தை ரெங்கன் 2024 ஆம் ஆண்டு மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் மணிகண்டனை அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று வழக்கு விசாரணை முடிவுற்று ரெங்கன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு மகனை அறிவாளால் வெட்டி படுகொலை செய்த குற்றத்திற்காக தந்தை ரெங்கனுக்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்ததோடு அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.




