• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம்

Byதரணி

Apr 5, 2024

திண்டுக்கல், ஆயக்குடி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி நாகேஸ்வரி(45) என்பவரை ஆயக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு பழனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.