மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர்,உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரின் துணைவியார் வழிபட்டனர்.
உலக புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் 10ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிஷேகம் விழா நேற்று துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது.

கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கிய விழாவில் இன்று கோமாதா பூஜை நடந்தது.இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது துணைவியார் வசந்தி நமச்சிவாயம்
பங்கேற்று வழிபட்டனர்.27 நட்சத்திரங்களின் நலம் பெற வேண்டி இந்த கோமாதா பூஜை நடந்தது.