• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம்

Byகாயத்ரி

Dec 10, 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 8-12-2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி திரு.பிபின் ராவத் மற்றும் 12 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து இந்திய மக்களுடன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மீட்புப் பணிகளிலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்து தந்திருந்தது.


மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து எழுதிய கடிதத்தில், இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்றும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெறவேண்டும் என தான் விழைவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.