• Tue. Apr 30th, 2024

பெண் குழந்தைகளைகாப்போம், கற்பிப்போம். மத்திய ரிசர்வ் படை பெண்களின் இரு சக்கர விழிப்புணர்வு பயணம்…

சர்தார் வல்லபாய் பட்டேலின் 148_வது பிறந்த தினம், குஜராத் ஏக்தா நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் எதிர் வரும் 31.10.23ல் நிறைவு செய்யப்படுகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 148_வது பிறந்த நாளை.”பெண் குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளை கற்பிப்போம் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தும் வகையில். மத்திய ரிசர்வ் காவல் படையின் பெண் வாகன ஓட்டிகள் படையினை சேர்ந்த 120 பெண்கள் 60 மோட்டர் சைக்கிளில் கன்னியாகுமரியிலிருந்து, குஜராத் மாநிலத்தில் ஏக்தா நாகர் நோக்கிய பயணத்தை.ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மாண்புமிகு ஏ.நாராயணசாமி வாழ்த்தி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக.கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தொடக்க நிகழ்வாக. குமரி மாவட்டத்தை சேர்ந்த இப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்த மூவர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு விழா மோடையில் கௌரவிக்கப்பட்டார்கள்.

விழாவில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் ஏ.நாராயணசாமி,மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி,எம்.ஆர்.காந்தி மற்றும் குமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த பெண்கள் மோட்டார் சைக்கிள் குழுவினர்.கேரளம், தமிழ் நாடு, புதுச்சேரி, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களின் வழியாக, குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகர் வரையிலான 3070 கி.மீ தூரம் பயணம் செய்து(அக்டோபர்_31)ம் நாளில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் மகளீர் மோட்டார் சைக்கிள் பெண் பயண குழு. இன்று கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவது போல். ஷில்லாங், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இருந்தும் இந்த பயணம் குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகர் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *