• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம்.. வி.ப.ஜெயபிரதீப்

ByA.Tamilselvan

Oct 2, 2022

மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம் என வி.ப. ஜெயபிரதீப் காந்திஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர், முதலமைச்சர், ஜனாதிபதி உட்பட பலர் காந்தியின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் காந்தி ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் ” அகிம்சையை ஆயுதமாக்கி சத்தியத்தின் வழியில் போராட்டம் நடத்தி ஆங்கிலயர்களின் அடக்கு முறையை தகர்த்தெறிந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகான் அண்ணல் காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தில் பாரத நாட்டிற்காக அவர் செய்த தியாகத்தையும், ஒப்பற்ற சேவையையும் நினைவு கூர்ந்து, அண்ணார் கற்பித்த அகிம்சையையும் ,சத்தியத்தையும் கடைபிடித்து வாழ்வோம் என உறுதியேற்போம் என கூறியுள்ளார்.