• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகே ஏலமன்னா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சிறுத்தை ஒன்று விழுந்து இறந்து கிடந்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிறுத்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.