• Thu. Mar 28th, 2024

ஓடிடியில் நம்பர் 1 சாதித்ததிலெஜண்ட் சரவணன்

சினிமாவில் சில நேரங்களில் யாராலும் கணிக்க முடியாத, யூகிக்க முடியாத சம்பவங்கள், அற்புதங்கள் நடந்துவிடுவது உண்டு அப்படி ஒரு அற்புதம் நடந்திருக்கிறது
‘தி லெஜண்ட்’ திரைப்படம், 03.03.2023 பகல் 12.30 மணிக்கு ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியானஇப்படம் ஸ்ட்ரீமிங்கில் ‘நம்பர் 1’ இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

” லெஜண்ட் சரவணன் நடிப்பில்கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படத்தை
ஜேடி-ஜெர்ரி என இரட்டையர்கள் இயக்கி இருந்தனர் திரையரங்குளில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் தூக்கப்பட்ட தி லெஜண்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியான முதல் நாளிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது

படம் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியாகி வருகிற சூழலில் ஆறு மாதங்கள் கடந்த பின்பு “தி லெஜண்ட்”
வெளியானது பற்றி படத்தின் இயக்குநர்களிடம் கேட்டபோது

“‘தி லெஜண்ட்’ வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமைக்கு டிமாண்ட் இருந்தது. படத்தின் முன்னோட்டம் வியூஸ்களைக் குவித்தது. சரவணன் சார்தான் படத்தின் தயாரிப்பாளர். அதனால் தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு, ஒரு தயாரிப்பாளராக ஓ.டி.டி-யில் வெளியிடுவதுப் பற்றி முடிவெடுக்காமல் இருந்தார். ஓ.டி.டி ரிலீஸ் எப்படிப் பண்ணலாம் என்பதைத் தீர்மானிக்கக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டார். வேறொரு பெரிய அறிவிப்புடன் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட வேண்டும் என்ற திட்டமெல்லாம் வைத்திருந்தார். ஆனால், இடையில் என்ன நினைத்தார் என்பது தெரியவில்லை. தற்போதுதான் படம் வெளியாகியுள்ளது. லேட்டா வந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். படம் பார்த்தவர்கள் பாராட்டுகளைக் குவித்து வருகிறார்கள். குறிப்பாக, சரவணன் சாரின் பிசினஸ் வட்டத்தினரின் வாழ்த்துகள் மிகப்பெரியது. தியேட்டருக்கே செல்லாமல் பரபரப்பாக இயங்குபவர்கள் அவர்கள். அவர்களெல்லாம் தற்போது ஓ.டி.டி-யில் படத்தைப் பார்த்துவிட்டு அசந்துபோய் பாராட்டி வாழ்த்துகிறார்கள்
தொழில்துறையிலிருந்து ஒருவர் வந்து, இவ்வளவு உழைப்பைக் கொட்டி நடிப்பது சவாலான ஒன்று.

ஓடிடியில் முதலிடம் பிடித்த படம்திரையரங்குகளில் வெற்றிபெறவில்லையே என்றபோது

“‘தி லெஜண்ட்’ படத்தை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத்தான் உருவாக்கினோம். சரவணன் சாரும் ‘ரஜினி, விஜய் சார் படங்கள் மாதிரி மாஸ் படமாகப் பண்ணவேண்டும்’ என்றே விரும்பினார். அவர் விருப்பப்படியே உருவாக்கினோம். மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் இந்தியாவில்அதிகரித்துள்ளதையும் அதற்கான, ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதையும் திரைக்கதையாக்கினோம்
ஆனால், இந்த பிரச்சினை மக்களால் பெரிதாகக் கவனிக்கப்படாமல் மசாலா காட்சிகள் மட்டும் கவனிக்கப்பட்டன.மையக்கருத்து கவனிக்கப்படவில்லையே என்ற சின்ன வருத்தம் மட்டும் இருந்து வந்தது. தற்போது, ஓடிடியில் வெளியாகிவிட்டதால் இனி அதுவும் கவனிக்கப்படும்.

“படம் திரையரங்குகளில் வெளியான போது கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததே என்ற போது”

“முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கே எதிர்மறையான விமர்சனங்கள் வந்திருக்கிறது அதுபோலத்தான், இந்தப் படத்திற்கும் வருகிறது. ஆரம்பத்தில் பலர் ட்ரோல் மெட்டீரியலாகவே சரவணன்சாரைப் பார்த்தார்கள். அதையும் தாண்டித்தான் அவர் இந்தப் படத்தில் நடித்தார். ரொம்ப பாசிட்டிவானவர் சரவணன் சார். விமர்சனங்களையெல்லாம் ஈஸியாகக் கடந்து வந்துவிட்டார்.
பலா படத்தைப் பாராட்டுவார்கள். சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எல்லோருக்கும் பிடித்தமாதிரி எந்த இயக்குநராலும் படம் எடுக்க முடியாது என்று சொல்லி எங்களுக்கே நம்பிக்கையூட்டிய மனிதர் சரவணன்அதனால், தன்னை ட்ரோல் செய்பவர்கள் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
ஓ.டி.டி-யில் படத்தைப் பார்த்தால்
‘தி லெஜெண்ட்’ கட்டாயம் சிறந்த பொழுதுபோக்குப் படமாக இருக்கும்என்ற நம்பிக்கை இருக்கு” என்கிறார் உறுதியுடன்.

திரையரங்குகளில் படம் வெளியானபோது பிரம்மாண்டமான வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டபோதும் வசூல் ரீதியாக வெற்றிபெறாத”தி லெஜெண்ட் ” திரைப்படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சரவணன் பிரம்மாண்டமான வகையில் தனிப்பட்ட முறையில் விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *