• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நகர் காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நன்றி..,

ByKalamegam Viswanathan

Jul 27, 2026

நீட் முறைகேடு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மறுபடியும் நடத்தப்பட்டது இதனால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலகக் கோரிமாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பி பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில் மாணவர் போராட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பரவி நீட் முறைகேட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாணவர் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கு காரணமான மாணவர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாடிப்பட்டி பேருந்து நிலைய முன்பு சோழவந்தான் தொகுதி சார்பில் நகர் காங்கிரஸ் தலைவர் ஒஎம்.முருகானந்தம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி நன்றி தெரிவித்தனர் இதில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசிய நகர் காங்கிரஸ் தலைவர் முருகானந்தம்,

டெல்லியில் நீட் முறை கேட்டிற்கு எதிராக போராடிய மாணவர்களை சந்தித்த காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தின் போது மத்திய அரசு மூலம் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் மத்திய மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ஆலோசனையின் பேரில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நூர் முகமது அறிவுறுத்தலின் பேரில் சோழவந்தான் தொகுதி சார்பாக வாடிப்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர் அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் திலகராஜ் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் வழக்கறிஞர்கள் செல்வகுமார் ராமசாமி துரைப்பாண்டியன் நித்ய பிரியா எஸ் சி எஸ்டி பிரிவு மூர்த்தி சங்கரபாண்டி வட்டார தலைவர்கள் பழனிவேல் அலங்காநல்லூர் ராயல் காந்திஜி பொன்கார்த்தி சோனைமுத்து சுரேஷ் பிரதாபன் எஸ் எஸ் குருசாமி வருசை முகமது ஜீவா செல்வராஜ் அழகு சின்னச்சாமி வீரபுத்திரன் பி பி ராஜேந்திரன் முத்து ராஜா வைரமணி சந்திரசேகர் மலை ராஜன் குருவித்துறை சீனி மும்மூர்த்தி இளைஞர் காங்கிரஸ் மணிவண்ணன் உள்பட 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.