• Fri. Sep 29th, 2023

வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்…

ByKalamegam Viswanathan

Aug 23, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் குருவித்துறை ஹரிச்சந்திரன், கச்சைகட்டி குரு ஆகியோர் மீது தாக்குதல் நடந்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் மறியலுடன் கூடிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் முத்துமணி தலைமை தாங்கினார்.செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் செல்வகுமார், முத்துராமலிங்கம், ராமசாமி, தங்கப்பாண்டி,கார்த்திக்,வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சப்ன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *