

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டார். மதுரை மாநகர் மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 77 சுப்ரமணியபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் 27 லட்சம் மதிப்பீட்டில் 17வது திட்டப்பணியாக பேவர் பிளாக் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அப்போது, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர்,அதனை உடனடியாக நிறைவேற்றித் தர, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி பொன் வசந்த், மாமன்ற உறுப்பினர்கள் பாண்டிச் செல்வி, ராஜ பிரதாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


