• Mon. Apr 21st, 2025

கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

BySeenu

Feb 19, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் அவர்களது உயிருக்கு உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதால் வழக்கறிஞரின் நலனை பாதுகாக்கும் வகையில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். தமிழக அரசு வழக்கறிஞர் சேமநல நிதி முத்திரைத்தாள் கட்டணத்தை ரூபாய் 30 இல் இருந்து 120 ஆக உயர்த்தப்பட்ட உள்ளதை திரும்ப பெற வேண்டும். சேம நல நிதியாக 10 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் மத்திய அரசின் புதிய வழக்கறிஞர்களின் சட்ட திருத்த மசோதா மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றங்கள் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.