விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது.

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் வழக்கு சம்மந்தமாக நீதிமன்ற நுழைவாயில் முன்பு பேசிக்கொண்டிருந்த முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி(27) என்பவரை இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.