• Mon. Oct 2nd, 2023

தன்னார்வலர் சூசைராஜ் எழுதிய வாசிப்புத் திறன் மேம்படுத்தும் பயிற்சி புத்தக வெளியீட்டு விழா..,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூசை ராஜ் சமூக ஆர்வலரான இவர் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறன் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு நாணயங்களின் வரலாறு நாணயங்கள் சேகரித்தல் குறித்து மாணவர்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த வாசிப்புத் திறன் என்ற நூலை முதற்கட்டமாக உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஜு தலைமை வகித்தார்,
கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி நூலை வெளியிட்டார்,
நிகழ்ச்சியில் பள்ளி தமிழ் ஆசிரியை மகேஸ்வரி, ஆங்கில ஆசிரியர் பாபு மாணவ மாணவிகளிடையே வாசிப்பு திறன் பற்றி சிறப்புரை ஆற்றினர். சூசை ராஜி- ன் சேவையை பாராட்டி பள்ளி சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *