
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் சேர்ந்த அழகேசன் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் காலை கடை திறந்து சாமிக்கு விளக்கேற்றி கடைக்கு நாளிதழ் வாங்க சென்றுள்ளார் சென்று ஐந்து நிமிடத்திற்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த திரியை நெருப்புடன் எலி இழுத்துச் சென்று பழைய நாளிதழ்கள் அடுக்கி வைத்திருந்த இடத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது தீப்பொறியானது நாளிதழில் தீ பற்றி மலமலவென எரிந்து கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது புகைமண்டலமாக காட்சியளித்தது உடனடியாக அருகே இருந்தவர்கள் தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தனர் குந்தா வட்டாட்சியர் அலுவலக கிராம அலுவலர் ராஜன் தினேஷ்குமார் உதவி அலுவலர் சிவசங்கர் சம்போ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டனர் இதனால் மஞ்சூர் மேல் பஜார் பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

