• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் …

Byகாயத்ரி

Nov 13, 2021

சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும், இந்த நிகழ்வு பௌர்ணமி நாளில் தான் ஏற்படும். நிலவு மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.


இந்நிலையில் வரும் நவம்பர் 19-ம் தேதி பூமியில் பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் மட்டும் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய வானிலை மையத்தின் தகவல்களின்படி, மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி சந்திரகிரகணம் நவம்பர் 19-ம் தேதியன்று 12.48 க்கு தொடங்கி 16.17 க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 21-ம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணம் மற்றும் கடந்த 600 ஆண்டுகளில் இதுவே மிக நீண்ட கிரகணம் ஆகும்.


அடுத்த முழு சந்திர கிரகணம் மே 16, 2022 அன்று நடைபெறும். ஆனால் இதனை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. நவம்பர் 8, 2022 அன்று இந்தியா முழு சந்திர கிரகணத்தை காணலாம்.