• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரளாவுக்கு கடந்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடந்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் உட்பட இருவர் தப்பி ஓட்டம்.

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, கருங்கற்கள் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அண்மை காலமாக கடத்தல் அதிகரித்து உள்ளது. நூறு சதவிகிதம் கடதலில் இருபது சதவிகிதல் பறிமுதல் செய்யபடுகிறது.

அந்தவகையில் இன்று ரேஷன் அரிசி கடத்தபடுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து டெம்போவில் அரசியை ஏற்றி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் இரண்டு பைக் மற்றும் டெம்போவை விட்டு விட்டு டிரைவர் உள்ளிட்ட இருவர் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து போலீஸ் கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டுவந்தனர். தப்பி ஓடியவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.