• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

“லால் சலாம்” எக்ஸ்டன்டட் வெர்ஷன்..,

Byஜெ.துரை

Jun 11, 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாகக் கொண்டுவந்துள்ள, லால் சலாம் படத்தின், புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் பதிப்பில், திரையில் வராத கதையுடன், இன்னும் ஆழமான உணர்வுகளுடன், லால் சலாம் திரைப்படம், இப்போது SunNXT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

நட்பு, துரோகம், இழப்பு மற்றும் புரிதலுக்கான போராட்டங்களைத் தழுவிய ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணம் தான் லால் சலாம்.

ஒரே கிரிக்கெட் அணியில் சிறுவயதில் விளையாடிய இரு நண்பர்கள், மதம், அரசியல் மற்றும் தவறான புரிதலால் பிரிந்துவிடுகின்றனர். அவர்களுக்குள் நிகழும் போராட்டம் தான் இந்தப்படத்தின் மையம். மதமும் அரசியலும் நட்பைப் பிரித்தாலும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டிராத புதிய பதிப்பு, ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக இப்போது ஒளிபரப்பாகிறது.

இந்த புதிய பதிப்பில், நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அட்டகாசமான ஸ்வாக், கிரிக்கெட் பின்னணி, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தின் அட்டகாசமான நடிப்பு ஆகியவற்றுடன், திரையில் கண்டிராத பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

ரஜினிகாந்த் மற்றும் ரஹ்மான் எனும் மறக்க முடியாத கூட்டணி இப்படத்திலும் அசத்தியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு புது வடிவம் தந்துள்ளது. வெறும் திரைப்படமாக இல்லாமல், லால் சலாம் மனித உணர்வுகளுக்கு வலிமை கொடுக்கும் ஒரு அழகான பயணம்.
“லால் சலாம்”