• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

சோழவந்தான் அருகே மேலக்காலில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனிமுத்து மகன் பிச்சை வயது 55. மேலக்கல் கிராமத்தில் கிராம பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி, பிச்சையம்மாள் ஆகிய இரண்டு மனைவிகள் நாகஜோதி, நாகமணி, லட்சுமி, முத்துமாரி 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வீட்டின் அருகே காலைக்கடன் கழிக்க சென்றவர் வாழைத்தோப்பில் மின் வயர் அறுந்து விழுந்து கிடந்ததில் கவனக்குறைவாக மின் வயரை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறையினர் மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து, அங்கு வந்த காடுபட்டி காவல்துறையினர் மற்றும் மேலக்கால் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் மற்றும் மற்றும் இந்த பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் இறந்த பிச்சையின் உடலை மருத்துவமனைக்கு உடல் கூர் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதிகாலையில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.