• Sat. Apr 26th, 2025

ஜூம்ஆ பள்ளிவாசலில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தியாகராஜன் தலைமையில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது. ஜமாத் தலைவர் சர்புதீன், செயலாளர் ஜபருல்லா, பொருளாளர் அஹமதுரியாஜ், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முத்துக்குமார், சிக்கந்தர் ராஜா, விக்னேஷ் ,நாகமணி முஷ்ரப் மற்றும் ஜமாத்தார்கள் கிராமத்தினர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.