


தவெக (நடிகர் விஜய்) கட்சி சார்பில் நடைபெற்ற ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாத இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்வில் திருப்பரங்குன்றம் தொகுதி த வெக கட்சி பொறுப்பாளாளர் மருதுபாண்டி தலைமையில் த வெக கட்சி நிர்வாகிகள் மற்றும் விளாச்சேரி பகுதி இஸ்லாமியர்களுடன் இணைந்து இப்தார் நோன்பு திறந்தனர்.

பின்னர் அவர்களுடன் நோன்பு கஞ்சி அருந்தி தவெக கட்சி பொறுப்பாளர் மருதுபாண்டி ரமலான் நோன்பு குறித்து சிறப்புரையாற்றினார் .

இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தவெக சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மதன், ரபீக் நஜிர் வகித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முகமது ரியால், செங்கிஸ்கான் கஜினி முகமது, நிஜாம் பாவா, யாபிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



