விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குவைத் ராஜா மக்கள் சமூக இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் குவைத்ராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 7000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் மன்னார்குடி ஜீயர் ராமானுஜ ஜீயர் மற்றும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆர் எஸ் எஸ் மோகன்பகவத் தம்பி மந்த பாலகிருஷ்ணா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்த நாள் விழாவில் இராஜபாளையம் புளியங்குடி சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 7000க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்தட்டு உதவிகளை குவைத் ராஜா மக்கள் சமூக இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் குவைத்ராஜா வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட மன்னார்குடி ஜீயர் ராமானுஜர் கைங்கர்ய மகான் என்ற விருதினையும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் சேவைச் செம்மல் விருதினையும் வழங்கினர்.