விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கம் நிறுவன தலைவர் குவைத்ராஜா அவர்களின் பிறந்த நாள் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு தென்மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 52 அணிகள் பங்கேற்றன போட்டிகள் கடந்த 17ஆம் தேதி துவங்கி 23ம் வரை நடைபெற்றது.

இந்த போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ் எம் ஜி ஜி அணி வெற்றி பெற்று கோப்பையும் 50,000 பரிசு தொகை வெற்றது. இரண்டாவது பரிசை சூரன் நர்சிங் காலேஜ் அணி பரிசு கோப்பையும் 30 ஆயிரம் ரூபாய் வென்றது. மூன்றாவது இடத்தை கிருஷ்ணாபுரம் நேதாஜி கிரிக்கெட் அணி பிடித்து 20 ஆயிரம் பரிசும் தொகையும் கோப்பையும் வென்றது. நான்காவது இடத்தை பிஎல் அணி பிடித்து பத்தாயிரம் ரூபாய் பரிசையும் நான்காவது இடத்திற்கான கோப்பையும் வென்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி கோப்பையும் பரிசு தொகையும் குவைத் ராஜா மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் குவைத் ராஜா வழங்கினார்.