• Fri. Apr 19th, 2024

கும்பகோணம் மாநகராட்சியை சுவாமிமலை பேரூராட்சியோடு இணைக்கக் கூடாது. மக்கள் போராட்டம்!

By

Aug 29, 2021 ,

கடந்த வாரம் தமிழக அரசு கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக சட்டசபையில் அறிவித்த நிலையில் மாநகராட்சியில் உள்ள சுவாமிமலை, தாராசுரம், சோழபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. அங்கு வரும் பக்தர்களை மட்டுமே நம்பி ஏராளமான வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் சரிவர திறக்கப்படாததால் வியாபாரம் நலிவடைந்து காணப்படுகின்றனர்.
இந்த சூழலில் கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்து அதனுடன் சுவாமிமலை பேரூராட்சி இணைக்கப்படுவதால் மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரி அதிகமாகும் .

எனவே சுவாமிமலை பேரூராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி இன்று ஒருநாள் சுவாமிமலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வர்த்தகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுவாமிமலை பேரூராட்சியை கும்பகோணம் மாநகராட்சியில் சேர்க்கக் கூடாது என்று கும்பகோணம் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் வர்த்தகர்கள் சார்பாக மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *