• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பழனியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா..!

ByP.Thangapandi

Dec 15, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் மெயின் ரோட்டில் பி.எம்.டி நகர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில். இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, மூல மந்திர ஜெயம் மற்றும் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சரியாக காலை 9:30 மணியளவில் கடம்புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் மங்கள இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்., இந்த கும்பாபிஷேக விழாவில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனியாண்டவர் சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.