• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அருகே 19 ஆண்டுகளுக்கு பின்பு ஸ்ரீ வீரகொண்டம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Feb 12, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வீரக்கொண்டம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது . இக்கோவில் 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.இந்நிலையில் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் 19 ஆண்டுக்கு பிறகு நடைபெற்றது .முன்னதாக, கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஐந்து கால பூஜைகள் நடத்திய பின்பு,  பூஜையில் வைக்கப்பட்ட தீர்த்தங்களை வேத, மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பூஜை நடத்திய பின்பு,  கோவில் மேல்  உள்ள கும்பத்திற்கு மகா சம்ப்ரோஜனம் நடைபெற்றது.
இவ்விழாவில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், தோப்பூர், கப்பலூர் உள்ளிட்டபகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.இதனை தொடர்ந்து, கோவில் சார்பில், கூடி இருந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.