செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், கொளப்பாக்கம் அடுத்த ஊனைமாஞ்சரி ஊராட்சியில் 1000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் M.G.மகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தில் சிவச்சாரியார்கள் ஓம் நமக ஓம் நமக என மந்திரங்கள் கூற கருட பகவான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னைத் தொடர்ந்து சன்னதியின் கோபுர கலசத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுற்றுப்புற அனைத்து கிராம மக்களுக்கும் அன்னதானம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்.