• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரியை கஞ்சா போதையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் – பாஜக மகளிர் அணி ஆட்சியாரிடம் மனு!..

குமரி மாவட்டத்தை கஞ்சா போதையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என கோரி பாஜக மகளிர் நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளித்தனர்.

பாஜா மாநில செயலாளர் உமாரதி ராஜன் தலைமையில் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாகர்கோவில் மாநாராட்சியில் கோட்டார், வடசேரி, மீனாட்சிபுரம், கோனாம் உள்ளிட்ட இடங்களிலும், மாவாட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இதனால் பல குடும்பங்கள் மற்றும் இளம் தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள்
பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா போதையால் கொலைகளும் நடந்து வருகிறது. இளம்தலைமுறையினரின் நலன் கருதி இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் கஞ்சாவை ஒழித்து, குமரி மாவட்டத்தை போதை பொருட்களில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.