• Sun. Apr 28th, 2024

குமரி கலைவிழாவின் நிறைவு தினத்தில் பங்கேற்ற குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…

கன்னியாகுமரியில் கடந்த 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்தது. முதல் நாள் விழா குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் சுற்றுலாதுறை அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.

குமரியில் ஆண்டு தோறும் நடந்து வந்த சுற்றுலா திருவிழா கடந்த சில ஆண்டுகள் தடைப்பட்டிருந்த நிலையில், தமிழக சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு கடந்த 12_ம் தேதி தொடங்கிய சுற்றுலா விழா 17_ம் நாள்(நேற்று) நிறைவடைந்தது.

குமரி சுற்றுலா விழாவில் தினம் பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டுகள், பரத நாட்டிய, குச்சுபிடி நடனம் , இசை நிகழ்ச்சி ஆகியவை தினம், தினமும் நடைபெற்றது. நேற்றைய நிறைவு விழாவில் பங்கேற்ற குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பல்வேறு போட்டிகளில் மற்றும் கடந்த ஐந்து நாட்கள் பங்கேற்ற பல்வேறு கலைஞர்கள் மற்றும்,மகாகவி பாரதியாரின் நினைவலைகள் என்ற கவியரங்கம் நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு, விஜய் வசந்த் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று, கன்னியாகுமரியும் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கும்பம் எடுத்து ஆடி. நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பார்வையாளர்களோடு அமர்ந்து நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகள்,மதுரை முத்துவின் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தார். சுற்றுலா துறை அதிகாரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *