• Fri. Jan 24th, 2025

குமாரபாளையம்-பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!பக்தர்கள்,கடவுள் வேடமனிந்து ஊர்வலம்

ByNamakkal Anjaneyar

Mar 23, 2024

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நான்கு கால பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒரு வாரமாக கடும் விரதம் இருந்து வரும் பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து பாலக்கரை பகுதி காவிரி ஆற்றில் நீராடி தங்கள் குடங்களில் புனித நீர் எடுத்து கொண்டு கலைமகள் வீதி, சேலம் முதன்மைசாலை, எடப்பாடி சாலை மற்றும் சின்னப்பநாயக்கன் பாளையம் வழியாக காவேரி நகர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். வழி நெடுகிலும் ஓம் சக்தி என்ற கோசமிட்ட படியே ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து தீர்த்த குடம் கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியின் போது சில பக்தர்கள் கடவுள்களின் வேடமிட்டும் இசைக்கு தகுந்தபடி நடனமாடி வந்தனர். ஊர்வலம் கோவில் வளாகம் வந்தடைந்ததும், தீர்த்த குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.