INDIA கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது, தேநீர் கடையில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு பொதுமக்களுக்கு தேநீர் போட்டு கொடுத்து வாக்குகள் சேகரித்தார் பின்னர் திருநங்கைகள் வாழ்வில் புதிய வசந்தத்தை ஏற்படுத்தியது டாக்டர் கலைஞர் மேலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து கொடுத்ததும் டாக்டர் கலைஞர் தான் என்று திருநங்கைகள் இடத்திலும் வாக்குகள் சேகரித்தார், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒவ்வொரு கடையாக சென்றும்,பேருந்து பயணிகள் இடையேயும் திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்குகள் சேகரித்தார் இந்த வாக்கு சேகரிப்பின் போது, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நகர செயலாளர் அசோக் குமார் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்