• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு பணிகள்..,

ByVasanth Siddharthan

Jun 16, 2025

பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளை துவக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் இன்று துவங்கப்பட்டன.

கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், சிற்பக் கலைஞர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டு குடமுழுக்குப் பணியை துவக்கி வைத்தனர். கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் 7 ம்தேதி திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்ற ஆகமவிதிப்படி வரும் 2026 ம் ஆண்டு நடைபெறும்.

கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டன. நிகழ்வில் பழனி திருக்கோயில் இணைஆணையர் மாரிமுத்து, திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.