விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கம் இளைஞர்கள் அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுகவிற்கு வரும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற வரலாற்றை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கப் போகிறார்.
எதிர்க்கின்ற கட்சியே எதிர் வரிசையில் இல்லாத அளவிற்கு ஒரு சூழ்நிலை உருவாகப்போகிறது.
திமுகவின் மீது நாட்டு மக்களுக்கு கோபம் வந்திருக்கிறது ஒரு வெறுப்பு வந்திருக்கிறது.மக்களின் கோபத்தை திமுகவின் தலைமையால் இனி சரி செய்ய முடியாது.
அதிமுக கரைவேட்டியை பார்த்தவுடன் டீக்கடைக்காரர் முதல் அனைவரும் அடுத்த ஆட்சி அண்ணா திமுக ஆட்சி தான் என்று கூறி வருகிறார்கள்.
விளம்பரத்தால் ஏமாற்றுகின்ற திமுக கூட்டத்தை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்க விருதுநகரில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளையும் நாம் வென்று வரலாறு படைத்து எடப்பாடியார் முன்பு சமர்ப்பிப்போம்.
விருதுநகர் மாவட்டம் என்று சொன்னால் அது எடப்பாடியாரின் கோட்டை என்று சொல்லும் அளவிற்கு நமது பணி இருக்க வேண்டும் என பேசினார்.







; ?>)
; ?>)
; ?>)