திட்டத்தில் ஏதாவது கமிஷன் பார்க்கலாம் ஆனால் திமுகவினர் திட்டத்தையே கமிஷனாக்கி விடுவதில் கில்லாடிகள் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விமர்சனம்.
மே தினத்தின் முக்கிய வெற்றியே தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை அதனை திமுகவினர் 12 மணி நேரமாக மாற்ற முயற்சி செய்கின்றனர். அதனை திரும்ப பெற வைத்ததவர் எடப்பாடியார். தொழிலாளர் நலனில் விரோதப் போக்கை திமுகவினர் கடைப்பிடித்து வருகின்றனர். தினமும் போதைப் பொருட்கள் பலகோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுகின்றன.

ஆனால் இவைகள் கண்துடைப்பாகவே நடைபெற்று வருகின்றன .போதை பொருளை பயன்படுத்துவதை விற்பனை செய்வதையும் முழுமையாக தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.. அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். எடப்பாடியார் கோட்டையை ஆளட்டும் கோபாலபுரத்தில் ஸ்டாலின் ஓய்வெடுக்கட்டும். கோட்டையில் தேசியக் கொடியினை எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்று ஏற்றுவார் திமுக ஆளும் தகுதி இழந்து விட்டது.
.
நீட்டுக்கு தடை கொண்டுவரப்படும் என திமுக அரசு ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதனால் தற்கொலை செய்த 27 மாணவர்களின் இறப்பிற்கு தீர்மானர் பதில் சொல்வார்களா? சாமானிய மனிதர் கூட திமுகவினர் துரோகம் செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன சிவகாசி சாத்தூர் உள்பட 60 இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் மாணவ மாணவியர்கள் பயின்று சாதனை படைத்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட பெருமை கொண்ட மருத்துவக் கல்லூரி விருதுநகர் மருத்துவ கல்லூரி ஆகும் இது நான் அமைச்சராக இருந்து முழு முயற்சி எடுத்து கொண்டுவரப்பட்டதாகும்.
ஏராளமான துணை சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் தான் சாத்தூர் ரயில்வே மாமா மூலம் சிவகாசி சாச்சாவரம் ரிசர்வேஷன் மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டன அதனை தடுக்க முயன்றது. திமுக அரசு சட்ட போராட்டம் நடத்தி பணிகள் தொடங்கிய நிலையில் ரயில்வே மெம்பங்களை திமுக கொண்டுள்ள பொய்யாக பரப்பு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் அதிமுக சார்பாக மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசியதாவது :-
போதை கலாச்சாரம் அதிமுக ஆட்சி நடந்ததா? திமுகவை சேர்ந்தவர்களே தவறு செய்வதால் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது.
போதை கலாச்சாரத்தை தடுக்க தெரியாத, ஆளத் தெரியாத திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். திமுக அரசு மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது.
அதிமுக ஆட்சிகளில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நடந்தது.
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக காவல்துறையினர். கடலுக்குள் நுழைந்து எவ்வித திருடர்களை யுகம் பிடித்து விடுவார்கள். ஆனால் இன்று
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலைகள் எல்லாம் மாற வேண்டும். தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறந்து வெளிச்சம் வரும்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி கேவலமான ஆட்சி நடக்கிறது. துப்புரவு பணிகளுக்கான ரூபாய் 70 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி எங்கே போகிறது என தெரிவதில்லை. ரேஷன் அரிசிகள் தரமாக இருப்பதால் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாய கடன் நகை கடன் அதிமுக ஆட்சியில் முழுமையாக தள்ளுபடி செய்ய பொதுச் செயலாளர் எடப்பாடி இடம் நேரில் தெரிவித்துள்ளேன் அவர் முதலமைச்சர் ஆனதும் உடனடியாக நிறைவேற்றப்படும்.
மாவட்ட முழுவதும் அதிமுக ஆட்சியில் புதிய காவல் நிலையங்கள் கட்டப்பட்டு, காவல்துறையினருக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறை வாகனங்களை திமுக ஆட்சியில் பழுது கூட நீக்கப் படாததால் காவல்துறையினர் ஆய்வுக்கோ முக்கியமான இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய வாகனங்கள் காவல்துறையினருக்கு வாங்கி தரப்படும் பள்ளிக்கூடங்களுக்கு திமுக ஆட்சியில் வெள்ளை கூட அடிக்கப்படவில்லை.
அரசு கஜானா பணத்தை திமுகவினர் தங்களது சொந்த பணம் போல் நினைத்து கொள்ளையடித்து சென்று விடுவார்கள். தமிழகத்தில் தினம் 8 கோடி மக்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில் கேள்விக்குறியாகி உள்ளது.
பட்டாசு தொழிற்சாலை விபத்திற்கு முக்கிய காரணமே தமிழ்நாடு அரசு தான். அரசு அதிகாரிகளுக்கு பயந்து பயந்து பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. வருவாய்த் துறையினர் பட்டாசு ஆலையின் உரிமையாளர்களையும் மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்கின்றனர். வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு வருகிறார்கள் .ஓடுங்கள் ஓடுங்கள் என விரட்டுகின்றனர். அதனைப் பார்த்து பதறி பதறி வேலை பார்ப்பதால் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வருவாய்த் துறையினர் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரிப்பணம் மக்களுக்கே செலவழிக்கப்படும்.
பணத்தை வைத்து திங்கவா போகிறீர்கள்? அல்லது தங்கத்தில் இட்லி செய்யப் போகிறீர்களா?
திட்டத்தில் ஏதாவது கமிஷன் பார்க்கலாம். ஆனால் திமுகவினர் திட்டத்தையே கமிஷன் ஆக்கி விடுகின்றனர். 100 சதவீதத்தில் 5 சதவீதம் வேலை மட்டுமே பார்த்துவிட்டு 95 சதவீதம் கமிஷன் பார்க்கின்றனர்.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியை விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடங்க சபதம் ஏற்போம். ஆரம்பித்து தமிழ்நாட்டில் ஒரு முடிவு ஏற்படுத்துவோம் என்றார்.