கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக இன்று இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பொதுமக்களின் தாகம் திர்க்கும் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழ வகைகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வின்போது விருதுநகர் மாவட்ட, மற்றும் இராஜபாளையம் சட்டமன்றத்தொகுதி கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.