• Wed. Dec 11th, 2024

மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது…

Byகாயத்ரி

Apr 9, 2022

தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி முகாமை நடத்தலாம். தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா வெகுவாக குறைந்ததால் மருத்துவத்துறை இந்த முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 92 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி, 73% பேர் 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். கொரோனா நோயை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட முகாம்களில் தமிழகத்தில் சுமார் 4 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.