பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நேரடி பட்ஜெட் தாக்கல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சிக்கான நேரடி பட்ஜெட் தாக்கல் கடைசியாக 2016-ம் ஆண்டு செய்யப்பட்டது.
அதற்குப் பின்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடியாக தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், வரும் 2022 – 2023 -ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் போது மேயர் பிரியா
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்திய அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த பட்ஜெட்டில் மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வித் துறை ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதல் அறிவிப்பாக
*மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.