தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்யவேண்டும் என காங்கிரஸ் விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ் .ராஜன் அறிக்கை.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்து நடைபெற்ற அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தற்போது 23ம் புலிகேசி போன்று பலவீனமாக உள்ளது நம்மிடம் வாளும் இல்லை படையும் இல்லை என்று நடிகர் வடிவேலு காமெடி போல் உளரி கொட்டி இருக்கிறார். இந்த தான் தோன்றிதனமான செயலை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் .ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தற்போது இளம் தலைவர் ராகுல் காந்தியின் நாடு தழுவிய யாத்திரையினால் எழுச்சி பெறும் நிலையில் திடிரென இப்படி தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கொண்டு கே.எஸ்.அழகிரி பேசுவதன் உள் நோக்கம்(மர்மம்) என்ன என்று தெரியவில்லை.
இளம் தலைவர் ராகுல் காந்தி .நாடு தழுவிய பாதயாத்திரை மூலம் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து ஓவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக போராடி கொண்டு இருக்கும் தருவாயில் கே.எஸ்.அழகிரி இப்படி காங்கிரஸ் தொண்டர்களை சோர்வடைய செய்யும் விதமாக வீண் தகவல்களை பரப்பி பேசிக்கொண்டு இருப்பது அவர் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு அழகல்ல மேலும் நான்கு ஆண்டுகளாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு எந்த ஒரு பங்களிப்பும் கொடுக்காமல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மட்டும் இருந்து கொண்டு பேட்டி அறிக்கை கொடுத்து கொண்டு மட்டும் இருக்கும் கே.எஸ்.அழகிரி வாய்க்கு வந்த படி இப்படி விசமதனமான முறையில் பேசுவதன் மூலம் அவர் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருக்க தகுதி அற்றவராக உள்ளதால் அவர் அப்படி பேசியது தவறு என்று உணர்ந்து உடனடியாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டு கொள்கிறேன்.என காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ் .ராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் – விவசாய சங்க பொதுச்செயலாளர் கோரிக்கை
