• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோயம்பேடு சந்தை இரண்டு நாட்கள் விடுமுறை

Byவிஷா

Apr 17, 2024

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த நடவடிக்கைகளை செய்துள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் உயர்நீதிமன்றம், திரையரங்குகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழங்கள் சந்தையான சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் விதமாக நாளையும், நாளை மறு தினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.