• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

WHO ஒப்புதலுடன் களமிறங்குகிறது கோவோவேக்ஸ் தடுப்பூசி

Byமதி

Dec 18, 2021

கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்க தடுப்பூசி நிறுவனமும் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவோவேக்ஸ் தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு, செயல்திறனுடன் உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது போல், தற்போது கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கியிருக்கிறது.