• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

முறைகேடாக பணி அமர்த்திய கோட்டாச்சியர்..,

ByP.Thangapandi

Jul 21, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் போது கூட நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும்., கலந்தாய்வு முடிந்து 5 ஆம் தேதி வெளியான உத்தரவில் வகுரணி கிராமத்தை தேர்வு செய்த கஸ்தூரி என்பவரை நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக வருவாய் கோட்டாச்சியர் பணி அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் மகப்பேறு விடுப்பு ஓர் ஆண்டு இருப்பினும் ஏழே மாதத்தில் பணிக்கு வந்த ரஞ்சனி, தனது இடத்தில் வேறு ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்த்தியதை அறிந்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுடன் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் இடம் மகப்பேறு விடுப்பில் சென்ற அரசு ஊழியரின் பணி இடத்தை அவர் திரும்பி வரும் வரை பொறுப்பு அதிகாரிகளை வைத்தே அரசு பணிகளை செய்ய வேண்டும் எனவும், நேரடியாக வேறு ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்த்தியது முறைகேடானது என கேள்வி எழுப்பிய நிலையில் கோட்டாச்சியர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறி முறைகேடாக பணி அமர்த்திய கோட்டாச்சியரைக் கண்டித்து அவர் முன்பே கை குழந்தையுடன் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்ட வருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் அலுவலகத்தை விட்டு வெளியேறிய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.