

கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியான கோவளம் ஊராட்சி பகுதியில் கூடன்குளம் அணு மின் நிலையம் தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் தூய்மை பணியில், இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தின் அடிப்படையில் இன்று (அக்டோபர்01)ம் நாள்.இந்தியாவில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதியில் தூய்மை பணி கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 02_மா நாள் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள் வரை தொடர வேண்டும் என்ற ஒன்றிய அரசின் திட்டப்படி, கன்னியாகுமரி கோவளம் ஊராட்சி பகுதியான சூரிய அஸ்தமனம் பகுதியில் தூய்மை பணியில், கூடன்குளம் அணுமின் நிலையம் தொழிற்சாலை பாதுகாப்புப் படை கமாண்டர் மேனி சவுத்ரி தலைமையில், தொழிற்சாலை படையினர் 80 பேர் சீருடையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.அவர்களுடன் கோவளம் ஊராட்சி தலைவர் இ.ஜெனிஸ், ஊராட்சி அலுவலக பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இவர்களுடன் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் காலை கல்லூரி மாணவிகளும் துப்பரவு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


