• Tue. Apr 30th, 2024

துளிர் அறம் செய் மையம் அமைப்பின், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..,

துளிர் அறம் செய் மையம், காயல்பட்டினம் அமைப்பின் சார்பில், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார குழுவினரின் ஊர்தி பயணத்தினர் குழந்தை கடத்தல், குழந்தை பாலியல், குழந்தைகளை கொண்டு பிச்சை எடுத்தல், குழந்தை கொத்தடிமை இவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் பயண பிரச்சார குழுவினரை,
கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி மண்டபம் முன் கன்னியாகுமரி காவல்நிலை ஆய்வாளர் திருமதி. சாந்தி வரவேற்றதுடன், துளிர் அறம் செய் மையம்_காயல்பட்டனம், நிறுவனர் வழக்கறிஞர், அஹமத், அவருடன் இந்த பிரச்சார குழுவில் உடன் வந்த குழந்தைகள் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான், வழக்கறிஞர்.பாலசந்திரன், முனைவர்.ராஜ், ஆனந்த கூத்தான், ஆசிரியர். சிதம்பரம் ஆகியோரது சமூக பணியை பாராட்டி அவரது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வாகனபயணத்தை நிறைவு செய்தும் வைத்தார்.

இந்த நிகழ்வின் நிறுவனர் அஹ்மத் தெரிவித்தது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று மிகவும் அவசியமானது.

அரசு மருத்துவ மனைகள் மட்டுமே அல்லாது தனியார் மருத்துவ முறைகளிலும் பெண் குழந்தைகளை கடத்தும் கும்பலின் நடமாட்டம் உள்ளது. அதனை மருத்துவமனை நிர்வாகம் தனியான ஒரு கண் காணிப்பை குழுவை பணியமர்த்த வேண்டும். இதை போன்று பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் குழந்தைகள் கண் காணிக்க அரசு தனி குழு ஒன்றை அமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *