• Mon. Apr 29th, 2024

கொடநாடு கொலை வழக்கு..,

Byகுமார்

Aug 25, 2023

கொடநாடு கொலை வழக்கு கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மதுரையில் ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா பேட்டி,

கொடநாடு கொலை வழக்கில் தனபால் கூறியதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். என மதுரையில் ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா பேட்டி

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள செய்தியாளர் அரங்கத்தில் வைத்து ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா செய்தியாளர்களை சந்தித்தார்

கொடநாட்டில் கொலை- கொள்ளை விகாரம் புது கட்டத்தை எட்டியுள்ளது..

எடப்பாடிக்கும் இந்த கொட நாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தம் உள்ளது என கனகராஜ் சகோதரர் தனபால் ஊடகத்தில் தெரிவித்தார்.

ஆகவே தனபால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

தனபால் ஆவணங்களை சேலத்திலும் ஆத்தூரிலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அன்றைக்கு உள்ள ஆளும் அதிமுக வின் கீழ் காவல் துறையினரும் தன்னைஅடித்தனர். தற்போதைய திமுக அரசு ஆட்சி காலத்திலும் காவல்துறையினர் தன்னை அடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

தனபால் கூறியதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்..

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடைநாடு கொலை வழக்கு 90 நாட்களில் கைது செய்வதாக கூறியுள்ளனர்.

என்னுடைய சகோதரர் என்னிடம் சொன்னார்.

எடப்பாடி பழனிச்சாமி தான் என்று..,

என்னிடம் நிறைய தகவல்கள் உள்ளது ஆனால் சொல்ல பயமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கொடநாடு கொலை நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.. திமுகவின் B டீம் எடப்பாடி பழனிச்சாமி தான். என இப்போது புரிகிறது.

கொடநாடு கொலை வழக்கில் மத்திய அரசும், மாநில அரசும் அதிமுக பிளவுபட்டு இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் என நினைக்கிறது..

சென்னையில் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டிலை வீசினார்கள் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் ஏன் ஓபிஎஸ்ஐ பற்றி பேசவில்லை.. பயமா..?

தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்களே பாதுகாப்பு கேடயமாக மாறுவார்கள்.

எடப்பாடி யார் முதல்வராக இருந்தபோது நமது அம்மா இதழில் நாம் ஆசிரியராக இருந்தேன். அப்போது கொடநாடு சம்பந்தமாக எழுத வேண்டாம் என்று எடப்பாடியார் கூறினார். அதற்கு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *