• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன், சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜர்…

BySeenu

Nov 28, 2023

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.

அண்மையில் இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தாா். அதன் அடிப்படையில் நீதிமன்றம் சாா்பில் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ் விவகாரத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் விபத்து குறித்து ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்த சிவகுமார் என்பவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பிய நிலையில் இன்று அவர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகிறாக வருகை புரிந்தார். கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த போது சிவக்குமார் 108 ஆம்புலன்ஸ் க்கு தகவல் அளித்ததாக விசாரணையில் தெரியவந்த நிலையில் அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். சிவக்குமார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் என்பதும் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.